தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கின்றார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,256ஆக எகிறியுள்ளது.
சென்னை:
நேற்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையிலும் இதுவரை இல்லாத அளவாக 1072 கொரோனா பேருக்கு பாதிப்பு உறுதியாகியது. இதானால் மொத்த எண்ணிக்கை 18,693ஆக உயர்ந்துள்ளது. 20ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பால் தலைநகர் சென்னை தித்திக் நகராக மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளந்துள்ளதால் இதுவரை 220 பேர் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
585 பேர் குணமடைந்துள்ளனர்:
நேற்று ஒரே நாளில் 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14,901ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 167 பேர் மொத்தமாக கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு வகைகளில் நடவடிக்கை மேற்கொண்டும் தொற்றின் வேகம் அதிகரித்து வருவது வேதனையடைய வைத்துள்ளது.
வேட்டையாடும் கொரோனா:
கொரோனாவின் அதிவேக பரவல் தமிழக அரசை நிலைகுலைய வைத்துள்ளது. நேற்றோடு தொடர்ச்சியாக 5 முறை கொரோனா தொற்று ஆயிரத்தை கடந்துள்ளது. அதே போல தொடர்ச்சியாக 5 முறை உயிரிழப்பு இரட்டை இலக்கத்தில் இருந்து வருகின்றது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று ஆயிரத்தை கடந்துள்ளது தமிழக அரசை திணறடித்தக்க செய்துள்ளது. இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை மூலம் மக்களை காக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.