ஈரோடு மாவட்டத்தில் சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழியை மண்ணை கொண்டு சமன் செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
ஈரோட்டில் 60வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை, மின்சார கேபிள் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஈரோடு மருத்துவமனை முதல் சந்தைக்கு உட்பட்ட பகுதி வரை குழியின் காரணமாக போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.
இதனை ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்ளாத பட்சத்தில், போக்குவரத்து ஊழியர் தனபால் என்பவர் அருகில் கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில இருந்து மண்வெட்டி எடுத்துக்கொண்டு வந்து மண்ணை தோண்டி இழுத்து சமன் செய்து சாலையை சரியாக்கினார். இவர் செய்த செயல்கள் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.