Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னடா இது…! கேசரியை மொய்த்த வண்டுகள்…. ஷாக்கான வாடிக்கையாளர்…. தொடரும் அவலம்….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் பிரபலமான சந்திரா என்ற அசைவ உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் சென்னையைச் சேர்ந்த 15 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சப்ளையர் பரிமாறிய கேசரியில் வண்டுகள் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உணவகத்தின் உரிமையாளரிடம் கேசரியில் வண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு உணவகத்தின் உரிமையாளர்கஇப்படித்தான் இருக்கும் வேணும்னா சாப்பிடுக இல்லைனா கிளம்பி போயிட்டே இருங்க என்று மிரட்டும் தோளில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி புஷ்பராஜுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு உணவகங்களில் இப்படித்தான் சுகாதாரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் வேளாங்கண்ணியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |