Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி ஏதும் சொல்லல ….! ”வாட்ஸ் அப்ல நான் பார்த்தேன்” இப்படி பண்ணுனா நடவடிக்கை பாயும் …!!

சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வெளியான தகவல் பொய் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற தகவல் குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது ஒரு தவறான செய்தி. இன்றைக்கு வரும் போது, வாட்ஸ் அப்ல நான் பார்த்தேன். என்னுடைய பெயரில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற ஒரு தவறான செய்தி வெளியிட்டு இருக்காங்க. இந்த தவறான செய்தி வெளியிட்டவர் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி எந்த செய்தியும் நாங்கள் வெளியிடப்படவில்லை, ஊடகத்தின் வாயிலாகவும்,  பத்திரிக்கை வாயிலாகவும் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு வீட்டுல 7 – 8 பேர் இருக்காங்க:

சென்னையை பொருத்தவரை மக்கள் தொகை நிறைந்த பகுதி. கிட்டத்தட்ட 87 லட்சம் மக்கள் அந்த நகரத்தில் வசிக்கிறார். இந்த பகுதியில் பல தெருக்கள் குறுகலான தெருக்கள் ஆக இருக்கிறது. அஞ்சி அடி, ஆறு அடி தான் அந்த சாலையின் அகலம், நெருக்கமான வீடு. ஒரே வீட்டுல 7 பேர் , 8 பேர் வசிக்கிறார்கள். இதனாலதான் இந்த தொற்று எளிதாக பரவுகிறது. அங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசு அனைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கட்டுப்பாடுடன் இருக்கணும்:

ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு ஐ.எ.எஸ், ஐ,பி,எஸ் அதிகாரிகள் நியமித்துள்ளோம், இதை கண்காணித்து ஒருங்கிணைப்பு செய்வதற்காக இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளோம், அமைச்சர்கள் 6 பேரை நியமித்துள்ளோம். எல்லா பகுதிக்கும் நேரடியாகச் சென்று மக்களிடத்திலே கேட்டுக் கொள்வதெல்லாம்  இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுக்கு ஒரே மருந்து, ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

அரசு சொல்லுறத கேளுங்க:

அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளியே செல்கின்ற அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். பொருட்களை வாங்க நிற்கும் போது இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பியவுடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.  வீட்டில் இருக்கின்றவர்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் இருமல் வந்தால், தொண்டை வலி ஏற்பட்டாலோ, சளி வந்தால், காய்ச்சல் வந்தாலோ உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். இதையெல்லாம் கடைபிடித்தால் இந்த நோயிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

விழிப்புணர்வு:

இதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்க வில்லை. மிகப்பெரிய வல்லரசு நாடு அமெரிக்காவிலேயே இதை நடைமுறைப் படுத்த முடியல. இந்தியாவில் சாதாரண மக்கள் வாழ்கின்ற பகுதி தமிழ்நாடு. அப்படிப்பட்ட பகுதியில் இவ்வளவு கட்டுப்பாடு இருப்பது மிகப்பெரிய விஷயமாக  இருந்தாலும், அரசு தொடர்ந்து என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஊடகத்தின் வாயிலாக, பத்திரிக்கை வாயிலாக, நாங்க பேட்டியின் வாயிலாக மக்கள் இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றோம்.

வேதனையா இருக்கு:

இன்றைக்கு நாள்தோறும் ஊடகத்தின் வாயிலாக இந்த நோய் எப்படி தாக்குகின்றது ? தாக்கப்பட்டால் நீங்கள் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற விவரங்களை ஊடகத்தின் வாயிலாக தெள்ளத்தெளிவாக தினம்தோறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் மக்கள் கடைபிடிப்பதை புறக்கணிக்கிறார்கள், அதுதான் வேதனையா இருக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Categories

Tech |