விருதுநகர் அருகே பால் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியையடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் அதே பகுதியில் பால் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது தொழுவத்தில் பால் கறக்க சென்ற இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்துக்குமார் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
இதை கண்டவுடன் இந்நேரத்தில் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே தகராறு முற்றியதது. இதில் திடீரென முத்துக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனியாண்டியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் முத்துக்குமாரை கைது செய்து முன்பகை காரணமாக நடந்த கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.