பிரபல நடிகையின் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தன்னைத் தவிர தன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, எங்கள் வீட்டில் எனது பெற்றோர்கள், என்னுடைய கணவர் மற்றும் எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்குமே தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆனால் எனக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. தற்போது எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் தனித்தனியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.