வாட்ஸ் அப்பில் புகார் அளிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தொழில்நுட்பம் வளர வளர பிரச்சினைகளும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஒரு சிலர் இந்த தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறார்கள் மற்றும் சிலரோ இதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தமக்குத்தாமே இழுத்துக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அதிலும், குறிப்பாக சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் மெசேஜ் வரும்போது முதற்கட்டமாக அலட்சியம் மெசேஜ் செய்துவிட்டு பின்பு வருந்துபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில்,
வாட்ஸ்ஆப் செயலியில் தேவையற்ற நம்பர்களில் இருந்து மெசேஜ் வந்தாலோ அல்லது வேறு பிரச்சனைகள் இருந்தாலோ புகார் அளிக்கும் வழிமுறையை இப்போது பார்க்கலாம். வாட்ஸ்அப் செட்டிங்ஸ் செல்லவும். Help என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே சென்றபின் contact-us பகுதிக்கு செல்லவும். அதில்,
புகார் குறித்து டைப் செய்து அது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் களை இணைக்கவும். பின் உங்கள் ஈமெயில் முகவரி கேட்கப்படும். அவற்றை நிரப்பி புகார் அளித்த அடுத்த கணமே, வாட்ஸ்அப் தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பதிவை முடிந்த அளவிற்கு ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.