அண்மைக்காலமாக whatsapp.OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் மோசடி நபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி, பணம் கேட்டு ஏமாற்றுவது போன்ற மோசடிகளை தெரிந்து கொள்ளவும். அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
Whatsapp OTP மோசடி என்பது என்னவென்றால், உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழிகள் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள், உங்கள் நண்பர் அல்லது உறவினர் போல் நடித்து தங்களின் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து தவறுதலாக வெளியேறி விட்டதாகவும், அதை சரிசெய்ய உங்களின் உதவி தேவைப்படுவதாகவும் கேட்பர்.
தங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து வெளியேறி விட்டதால், தங்களுக்கு OTP எண்ணை பெற முடியவில்லை என்றும், அதற்கு பதிலாக உங்கள் எண்ணுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறுவர். அப்போது அந்த OTP எண்ணை நீங்கள் அவரிடம் சொன்னால், உங்கள் கணக்கிலிருந்து logout ஆகிவிடுவீர்கள். அதன்பின், உங்கள் கணக்கு விவரங்களை மட்டுமல்லாமல், உங்கள் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஹேக்கர்கள் திருடி விடுவார்கள்.
இந்தியாவில் அண்மையில் வாட்ஸ்அப் பேமென்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஹேக்கர்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. உங்கள் whatsapp அக்கவுண்ட் உடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டு இருந்தால் அது ஹேக்கர்களுக்கு மிகவும் வசதியாகி விடும்.
ஒருவேளை உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால், என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் மட்டும் அல்லாமல், நெருங்கிய சொந்தங்கள், உறவினர்களுக்கு தவறுதலான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உங்கள் மீதான எண்ணங்கள் எதிர்மறையாகும். மேலும் உங்களது பெயரைச்சொல்லி அவர்களிடமும் ஏமாற்றி பணம் பறிக்க வாய்ப்புள்ளது.
இந்த மோசடிக்கு நீங்களே பலியாக நேர்ந்தால், உங்கள் whatsapp அக்கவுண்ட்டை உடனடியாக Reset செய்து மீண்டும் லாகின் செய்யவேண்டும். பெரும்பாலும் நீங்கள் மோசடியில் சிக்காமல் இருக்க, நீங்கள் முதலில் செய்யவேண்டியது இதுதான். யாரிடமும் உங்கள் OTP எண்ணை பகிர வேண்டாம். உங்களின் நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் பகிர வேண்டாம். உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அவர்களுக்கு போன் செய்து கேட்டு விடுங்கள். நினைவிருக்கட்டும் நீங்களாக கேட்டுக் கொண்டால் தவிர,
உங்களுக்கு ஓடிபி எதையும் whatsapp அனுப்புவதில்லை. மேலும் மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த, மிகவும் உதவியாக இருக்கும் 2FA அல்லது டூ ஃபேக்டர் உறுதிப் படுத்தும் முறையை வாட்ஸ்அப் வழங்குகிறது. வாட்ஸ் அப் செயலியில் settings>account > two step verification என்று படிப்படியாக சென்று ஆப்ஷனை கிளிக் செய்து இந்த வழிமுறையை ஆக்டிவேட் செய்யவும்.
இதன் மூலம் உங்களது அக்கௌண்ட் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் தெரியாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் லிங்குகளை தயவு செய்து திறக்க வேண்டாம். அதேபோல தெரியாத அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் பைல்களை டவுன்லோட் செய்யவும் வேண்டாம். இதன் மூலம் உங்களது ஒட்டுமொத்த மொபைல் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.