Categories
தேசிய செய்திகள்

WhatsApp-இல் யாரும் எதிர்பார்க்காத சூப்பரான அப்டேட்….. அட இது நம்ம லிஸ்ட்லேயே இல்லயே….!!!!

WhatsApp பயனர்களுக்கு புதிய அப்டேட்க்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இனி வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் கருத்துக் கணிப்புகளை நடத்த முடியும். இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 12 விருப்பங்கள் வரை சேர்க்க முடியும் என்றும், ஆனால், முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு இறுதியாக இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் போது அதன் எண்ணிக்கையில் மாறுபாடுகள் இருக்கலாம் என்றும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உருவாக்கத்தில் உள்ள இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான சாட் பகுதியில் இதற்கான வசதிகள் இருக்கும் என்றும், இது Android 2.22.10.11 க்கான WhatsApp பீட்டாவின் அப்டேட்டில் இதனை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஐபோன் பயனர்கள் தங்கள் செயலியில் புதிய கேமரா ஷார்ட்கட்டைச் சேர்க்கும் அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்படும் என்று சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற புதிய அம்சங்கள் செயலியை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |