பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவ்வப்போது வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி whatsapp பேங்கிங் என்ற சேவையை தொடங்கியுள்ளது.
இதற்கு நீங்கள் எஸ்பிஐ வங்கியில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து Wareg உங்கள் வங்கி கணக்கு எண்ணை 720893148 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதன்பின் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் வங்கியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் ஆகியவை மட்டும் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் பிற சேவைகளும் இதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.