மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இலவச வாய்ஸ் கால், வீடியோ கால், SMS வசதி என அனைத்து வசதிகளையும் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இது போக பயனர்களின் செய்தியை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் வாட்ஸ்ஆப் முக்கிய பங்கு வகிப்பதால் பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே ஏகப்பட்ட அப்டேட்களை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நமக்குமே நாமே மெசேஜ் செய்யும் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிடவுள்ளது. மெட்டாவின் பேஸ்புக் & இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த வசதி வாட்ஸ்அப்பில் வேண்டும் என்ற பயனர்களின் கோரிக்கை நிறைவேறவுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் இந்த வசதி விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.