உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான பயனாளிகள் whatsapp செயலில் உபயோகம் செய்து வருகின்றன. இந்த பயனாளிகளின் வசதிக்காகவே வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புது புது மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது whatsapp நிறுவனம் 6 முக்கிய அப்டேட்களை வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறி இருந்தால், யார் வெளியேறுகிறார் என்பதை தெரியாத வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் வழங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து ஒருவருக்கு அனுப்பும் செய்தி 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்கு நீக்கும்படியான அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வழங்கியது. தற்போது ஒருவர் அந்த செய்தியை நீக்குவதற்கு முன்பே அதனை சேமித்துக் கொள்வதற்கான வசதியே whatsapp நிறுவனம் வழங்க இருக்கிறது.
இதனையடுத்து வீடியோ கால் செய்யும்போது அதில் அவதார் போன்ற இமோஜிகளை சேர்த்துக் கொள்ளும்படியான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்க இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்கலாம் மற்றும் மறைக்க விரும்பினால் மறைத்துக் கொள்ளும்படியான வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்க இருக்கிறது. ஆனால் லாஸ்ட் சீனை மறைக்க முடியாது ஆன்லைனில் இருப்பதை மட்டும் மறைத்துக் கொள்ளலாம். மேலும் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பும்போது Waveform வடிவில் வழங்க வாட்ஸ அப் முடிவு செய்துள்ளது. மேலும் கூடிய விரைவில் இந்த புதிய அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது.