நீங்கள் வோடாபோன் ஐடியா நம்பருக்கு வாட்ஸ் அப் மூலமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றால் இதனை மட்டும் செய்தால் போதும்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா சிம் கார்டுகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வோடாபோன் ஐடியா சிம் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக ரீசார்ஜ் செய்ய புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது vi App, Paytm மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை இயங்குதளங்களுடன் ஆஃப்லைன் ரீ சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுள்ளனர். ஆனால் வோடபோன் ஐடியா பயனாளர்கள் தற்போது வாட்ஸ் அப் மூலமாக ரீசார்ஜ் செய்யலாம். VI நம்பருக்கு வாட்ஸ் அப் வழியாக ரீசார்ஜ் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வாட்ஸ்அப் நிறுவனத்தின் நம்பரை- 65429700 பயன்படுத்தி Hi என்று ஒரு மெசேஜ் செய்து தொடங்கவும். அதன் பிறகு அதில் இருந்து அனுப்பப்படும் மெசேஜ்க்கு நீங்கள் தொடர்ந்து ரிப்ளை செய்து வர வேண்டும்.
அதில் நீங்கள் ரீ-சார்ஜ் செய்யும் விபரங்கள் அனைத்தும் கேட்கப்படும். தேவையான திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பேமெண்ட் லிங்கை ஒரு எஸ்எம்எஸ் வழியாக உங்களுக்கு அனுப்பும். அதன் வழியாக நீங்கள் பணம் செலுத்தலாம். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த நெட்வொர்க் சிம் கார்டுக்கு பல அதிரடி ஆபர் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.