உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
வாட்ஸ்ஆப் குரூப்பில் பிறர் அனுப்பும் மெசேஜ்களை அட்மின்களே நீக்கும் புதிய அம்சத்தை அச்செயலி அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் தேவையில்லாத மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பிறர் பகிர்வதை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.