அரசு கலை, அறிவியல் கல்லூரி பணியாளர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் தங்கள் குறைகளை பதிவிட கூடாது என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தன்னுடைய பிரைவசி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று அறிவித்தது. இதனால் பயனர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி பணியாளர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் தங்கள் குறைகளை பதிவிட கூடாது என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்பில் குறை கூறும் பணியாளர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும், குறை இருந்தால் மேலதிகாரிகளிடம் தான் கல்லூரி பணியாளர்கள் முறையிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.