Categories
Tech டெக்னாலஜி

“WHATSAPP-ல் புதிய வசதி” ஒரே லிங்கில் 32 பேர் இணையும் வீடியோ கால்…. மெட்டா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் வீடியோ காலில் 8 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் வசதி தற்போது இருக்கிறது. இதில் 32 பேர் வரை கலந்து கொள்ளும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வாட்ஸ் அப்பில் 32 பேர் வரை இணைய செயலியில் ஒரு லிங்க் அனுப்பினால் போதும். அந்த லிங்கை கிளிக் செய்து whatsapp வீடியோ காலில் இணைந்து கொள்ளலாம். இந்த தகவலை மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமூக வலைதளமான பேஸ்புக்கில் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார். அதன்படி வாட்ஸ் அப்பில் இந்த வாரம் முதல் கால் லிங்க் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இதன் மூலம் 32 பேர் குழு வீடியோ காலில் இணைந்து கொள்ளலாம். அதோடு 32 பேர் வரை இணையும் பாதுகாப்பான என்கிரிப்ட் வீடியோ அழைப்பையும் சோதித்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் யூசர் கால் பகுதிக்குள் சென்று கால் லிங்க் உருவாக்கி அதை தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவையை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து டோன்ட் டிஸ்டர்ப் என்ற வசதியும் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

அதாவது வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களை தொந்தரவு செய்யாத முறையை இயக்கும் போது வாட்ஸ் அப் அழைப்புகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதோடு மிஸ்டு கால் அலர்ட் முறையையும் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ் அப்பில் டோன்ட் டிஸ்டர்ப் மிஸ்டு கால் எச்சரிக்கை வந்த பிறகு whatsapp மிஸ்டு காலை பயனர் சாட்டில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இது தொடர்பான சோதனை முடிவடைந்த பிறகும் டோன்ட் டிஸ்டர்ப் வாட் மிஸ்ட் கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் ‌

Categories

Tech |