Categories
பல்சுவை மாநில செய்திகள்

WhatsApp-ல் வருகிறது கவர் போட்டோ?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

மெட்டா நிறுவனத்தின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் செயலியில், முகநூல் பக்கத்தை போன்று கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்த தகவல் வாட்ஸ்அப் செயலி மேம்படுத்துபடுவது குறித்த தகவல்களை அறிய உதவும் பீட்டா இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

அந்த அடிப்படையில் இந்த புதிய வசதியின் மூலமாக நாம் புரொபைல் போட்டோவுடன், இனி கவர் போட்டோ ஒன்றையும் கூடுதலாக சேர்க்கலாம். இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதற்கட்டமாக பிஸ்னஸ் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகமாகிறது. இந்த அம்சம் குறிப்பாக பிஸ்னஸ் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |