Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

WHATSAPP வெச்சு இருக்கீங்களா…? உஷார்…! இது புது வகையான மோசடியா இருக்கே…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதிலும் ‘Hi Mum’ என்ற புதுவகை மோசடி பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த வகை மோசடி வாட்ஸாப் மூலம்தான் நடைபெறுகிறது. புதிய நம்பரில் இருந்து மெசேஜ் அனுப்பும் மோசடிக்காரர்கள் நமது நண்பர்களைப் போல பேசி, “என்னுடைய நம்பர் தொலைந்து விட்டது. இந்த நம்பருக்கு GPayயில் பணம் அனுப்புங்கள்” என்று கேட்டு பணம் பறிக்கிறார்கள். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் மட்டும் 254 கோடி வரை மோசடி நடந்துள்ளதாம்.

Categories

Tech |