வாட்ஸ் அப்பை விட மேசஞ்சர் செயலி மிகவும் ஆபத்தானது என்று பிரபல நிறுவனர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனமானது பயனர்களின் தகவல்களை பிற வலைத்தளங்களுக்கு பரிமாறபடும் என்று கூறியதால் வாட்ஸ் அப் பயனாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பெரும்பாலான பயனர்கள் வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை விட பேஸ்புக் மெசெஞ்சர் மிகவும் ஆபத்தானது என பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனர் ஜாக் டாப்ட்மேன் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் மேசஞ்சரில் இருந்து 2000 கோடிக்கும் அதிகமான செய்திகள் வணிகத்துக்கு, பயனர்களுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. வாட்ஸ் அப்பில் இருக்கும் பாதுகாப்பு கூட மேசஞ்சரில் கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.