வாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்க்கு இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயல்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து அனுப்பிய கடிதத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணிமாற்றம் விவரங்கள் இருப்பிட விவரங்கள் அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் அனைத்தையும் வாட்ஸ்அப் எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என வணிகர்கள் கூட்டமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் தங்களை தகவல்களை படிக்கும் புதிய கொள்கையை கைவிட வேண்டுமென வாட்ஸ்அப்புக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அல்லது வாட்ஸ் அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் இன் புதிய கொள்கை தனிநபருக்கு மட்டுமல்லாமல், தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து வரக்கூடும் என்று வணிகர்கள் கடிதத்தில் எச்சரித்துள்ளனர்.