சட்டவிரோத போராட்டத்தை தூண்டும் பதிவுகளை நீக்காததற்கு கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் மீது ரஷ்யா வழக்கு தொடர்ந்துள்ளது.
சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் பதிவுகளை கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் நீக்கவில்லை. அதனால் ரஷ்யா ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் 3 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் சட்டவிதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், 4 மில்லியன் அபராதம் விதிக்கப்படும். மேலும் டிக் டாக் மற்றும் டெலிகிராம் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்க தவறியதாக ரஷ்ய அதிகாரிகள் 5 சமூக ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.