வாட்ஸ் அப்பில் ரீட் லேட்டர் என்ற புதிய அம்சத்தை தற்போது அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனமானது தன்னுடைய தேவையில்லாத வேலையினால் பல பயனர்களை வேறு செயலுக்கு மாற செய்தது. இதையடுத்த்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து பயனர்களின் தகவல்கள் பகிரப்பட்டாது என்று கேட்டுக்கொண்டது. பின்னர் வாட்ஸ் அப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் புதிய “Reader Later” அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ரீட் லேட்டர் அம்சத்தின் மூலமாக நீங்கள் படிக்காத சேட் தகவல்களை தனியாக சேகரிக்க முடியும். தற்போது உள்ள Archieve போல இந்த அம்சம் பயன்பட்டாலும் ஆர்கைவ்ஸில் நாம் சேகரித்து வைத்திருக்கும் நபரிடமிருந்து புதிய மெசேஜ் வந்தால் சாட்டில் காட்டிவிடும். ரீட் லேட்டரில் அந்த நபரிடம் இருந்து மெசேஜ் காட்டாது.