Categories
தேசிய செய்திகள்

WHATS APP வில் நிர்வாண வீடியோ கால்…. ரூ.18 லட்சம் அபேஸ்…. பகீர் சம்பவம்….!!!!

குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு வாட்ஸ் அப்பில் மர்மமான பெண் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அவரும் அந்த பெண்ணிடம் பேசத் தொடங்கியுள்ளார். அப்போது அந்த பெண் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி வீடியோ கால் செய்து உள்ளார். சிறிது நேரம் இன்பதிற்கு மயங்கிய அந்த நபரும் வீடியோ காலில் வர, அதில் ஒரு பெண் நிர்வாணமாக தோன்றியுள்ளார். அதன் பிறகு அந்த வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்ட அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர வாங்கி அதிகாரி ஒப்புக்கொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து டெல்லி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக வங்கி அதிகாரிக்கு போன் செய்த நபர் ஒருவர், அந்த பெண் புகார் அளித்துள்ளதாக அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பண தர வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதற்கு பயந்து போன வங்கி அதிகாரி இதுவரை ரூ.16.50 லட்சம் கொடுத்து உள்ளார். அதன் பிறகும் அந்த வீடியோவை யூடியூப் சேனல் ஒன்லி லிக் ஆகிவிட்டதாகவும் அதை நீக்க வேண்டுமென்றால் youtube சேனல் உரிமையாளருக்கு ரூ.1.30 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரும் தனது நண்பர் மூலம் அந்த பணத்தை அனுப்பி உள்ளார். மீண்டும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் வங்கி அதிகாரி பணம் கொடுக்க மறுத்துள்ளார். ஒய்வு பெற்ற ஊழியரிடம் ரூ.17.80 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |