Categories
டெக்னாலஜி பல்சுவை

Whatsapp ல் மெசேஜ் டெலிட் ஆயிடுச்சா…? கவலைப்படாதீங்க… திரும்ப பெற எளிய வழி..!!

வாட்ஸ் அப்பில் உள்ள மெசேஜ் எல்லாம் டெலீட் ஆகிவிட்டால் கவலைப்படாதீர்கள். அதனை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது இதில் பார்ப்போம்.

வாட்ஸ்அப் என்பது செய்தி, வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு தளம். ஆவணங்கள் அனுப்பவும் இந்த வாட்ஸப் மிகவும் வசதியாக உள்ளது. அப்படி இருக்கையில் அவை எல்லாம் அழித்து விட்டால் அதனை திரும்ப பெறுவதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒரு அமைப்பையும் வழங்கவில்லை. ஆனால் டெலிட் ஆன ஒன்றை திரும்பபெற நீங்கள் மூன்று தரப்பு செயலியைப் பயன்படுத்த முடியும்.

WhatsRemoved + என்ற செயலி. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் வழியாக பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் செட்டிங் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் சேமிக்க வேண்டிய மெசேஜை தேர்வு செய்து நெக்ஸ்ட் கொடுத்து yes என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அழிந்தால் இதில் பதிவாகியிருக்கும். இதுபோன்ற செயலி வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை என்பதால் இது பாதுகாப்பு தன்மை கொண்டிருக்கும் என்பது கேள்விக்குறிதான்.

Categories

Tech |