வாட்ஸ்அப் நிறுவனமானது தனியுரிமை அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில் பயனரின் “லாஸ்ட் சீன்” அமைப்பை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாதவர்களிடம் இருந்து தானாகவே மறைக்கும் வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனமானது உலகம் முழுவதும் உள்ள தனது பயனர்கள் சிறப்பான அனுபவத்தை உணரும் வகையில் புதிய அம்சங்களுடன் உள்ள புதுப்பிப்புகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பயனர்கள் புதுப்புது அம்சங்களை பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ்அப் மற்றொரு தனியுரிமையை மையமாக கொண்ட அம்சத்தை புதிய அப்டேட் ஆக வெளியிட்டு உள்ளது. அதன் தனியுரிமை அம்சங்களை மேன்மைப்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்அப் பயனரின் “லாஸ்ட் சீன்” நேரத்தை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாதவர்களிடம் இருந்து தானாகவே மறைக்கும்.
அதாவது அறிமுகம் இல்லாத நபர் அல்லது தெரியாத எண் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி இருந்தால் கடைசியாக நீங்கள் ஆப்பில் ஆன்லைனில் இருந்த நேரத்தை அவர்களால் பார்க்க முடியாது. “லாஸ்ட் சீன்” நேரத்தை காட்டுவது என்பது வாட்ஸ் அப்பில் முக்கிய அம்சமாகும். இதில் பயனர்கள் தங்களுடைய விருப்பப்படி “லாஸ்ட் சீன்” அமைப்பை அமைக்கும் விருப்பத்தை வழங்குகிறது. இதில் தேர்வு செய்வதற்கு அனைவரும் எனது தொடர்புகள் மற்றும் யாருக்கும் இல்லை என்பது போன்ற 3 விருப்பங்கள் இருந்தது. ஆனால் இனி “அனைவருக்கும்” என்ற அமைப்பு இல்லாமல் “எனது தொடர்புகள்’ என அமைக்கப்படும் என்று WABetalnfo தெரிவித்துள்ளது.
மேலும் புதிதாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சத்தின்படி அனைத்து புதிய சாட்சிகளிலும் பயனர்கள் மறைத்து வரும் செய்திகளை இயல்பாக இயக்கலாம். எல்லா புதிய மெசேஜ்களும் நீங்கள் தேர்ந்தெடுத்த காலப்பகுதியில் மறைந்துவிடும். குரூப் மெசேஜ் உருவாக்கும்போது வாட்ஸ்அப் புதிய விருப்பத்தைச் சேர்த்துள்ளது. இதை தவிர மேலும் 2 கால அவகாசங்களை வாட்ஸ்அப் சேர்க்கிறது. வாட்ஸ்அப்பில் செய்திகளை தானாக நீக்குவதற்கு பயனர்கள் 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் மொபைல் பயன்பாட்டிலுள்ள தனியுரிமை அமைப்புகளுக்குச் சென்று “Default Message Timer” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.