Categories
Tech டெக்னாலஜி

WhatsApp பயனர்களே!… உங்களுக்கு Storage பிரச்சனை இருக்குதா….? சரி செய்ய எளிய வழி இதோ….!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் குருப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயன்படுத்தலாம். தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அவதார் ஸ்டிக்கர்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் பர்சனல் மற்றும் அபிஷியலாக நிறைய பேர் பயன்படுத்துவதால் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல்லாக நேரிடும். இதனால் நிறைய பேருக்கு ஸ்டோரேஜ் பிரச்சினை ஏற்படும். இந்த ஸ்டோரேஜ் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அதில் திரும்பத் திரும்ப இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்களை சரி பார்த்து டேட்டாவை நீக்க வேண்டும்.

அதன் பிறகு செல்போன் கேலரியில் இருக்கும் தேவையில்லாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் சரிபார்த்து டெலிட் செய்ய வேண்டும். அதோடு உங்களுக்கு வாட்ஸ் அப்பில் வரும் ஆடியோ மற்றும் வீடியோக்கள் போன்றவைகள் தானாக பதிவிறக்கம் ஆவதை நீங்கள் தடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட சாட்களில் இருக்கும் ஆட்டோ டவுன்லோட் என்பதை ஆப் செய்து வைக்க வேண்டும். மேலும் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வாட்ஸ் அப்பில் ஸ்டோரேஜ் ஃபுல்லாவதை கட்டுப்படுத்தலாம். ‌

Categories

Tech |