Categories
Tech

Whatsapp பயனர்களே உஷார்….. யாரும் இத பண்ணாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.இதனால் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தற்போது வாட்ஸ் அப் குருப்பில் அதிகபட்சமாக 1024 பேர் வரை இணையும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஜிபி வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்திய பயணர்களின் தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜிபி வாட்ஸ்அப் இன் குலோன் வாட்ஸ் அப் ஆகியவற்றில் பயனர்களின் டேட்டா திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் பாதுகாப்பு இல்லாத செயல்களை பதிவிறக்கம் செய்வது மற்றும் அதனை உபயோகப்படுத்துவதால் பயனர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்கள், உரையாடல்கள் அனைத்தும் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற செயல்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |