Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்… தப்பிப்பது எப்படி..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அண்மைக்காலமாக வாட்ஸ்அப் OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் தனிநபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றுவார்கள். இது பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ்அப் OTP மோசடி என்றால் என்ன?

உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழி மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் போல் நடித்து தங்களின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து தவறுதலாக வெளியேறி விட்டதாகவும் அதை சரி செய்ய உங்களின் உதவி தேவைப்படுவதாகவும் அவர்கள் கேட்பார்கள் தங்கள் கணக்கில் இருந்து வெளியேறி விட்டதால் தங்களுக்கு OTP என்னை பெற முடியவில்லை என்றும் அதற்கு பதிலாக உங்கள் எண்ணுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாகவும் சொல்வார்கள். அப்போது உங்களுக்கு வந்த எண்ண நீங்கள் ஹேக்கரிடம் சொன்னாள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து லாக் அவுட் ஆகிவிடுவீர்கள்.  அதன்பின் உங்கள் கணக்கு விவரங்களை மட்டுமல்லாமல் உங்களின் அனைத்து மெசேஜ்கள் போட்டோக்கள் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஹேக்கர்கள் திருடி விடுவார்கள்.

வாட்ஸ்அப் பேமெண்ட்:

இந்தியாவில் அண்மையில் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஹேக்கர்களால் ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது உங்கள் வங்கி கணக்குடன் உங்கள் இன் வாட்ஸ்அப் எண் இணைக்கப்பட்டு இருந்தால் அது ஹேக்கர்களுக்கு  வசதியாகி விடும்.

உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டால் என்ன ஆகும் ?

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செய்தி அனுப்பும் ஹேக்கர்கள் உங்கள் பெயரில் அவர்களிடம் ஏமாற்றி பணம் பறிக்க வாய்ப்புள்ளது

அப்படி நடந்தால் என்ன செய்வது ?

இந்த மோசடிக்கு நீங்களே பலியாக நேர்ந்தால் உங்கள் வாட்ஸ் அப்பை உடனடியாக ரீசெட் செய்து மீண்டும் லாகின் செய்ய வேண்டும்

இந்த மோசடியை தவிர்ப்பது எப்படி ?

மோசடியில் சிக்காமல் இருக்க நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான் யாரிடமும் உங்கள் OTP ஐ பகிர கூடாது உங்களின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்களாக இருந்தாலும் வேண்டாம் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர்களுக்கு போன் செய்து கேட்டு விடுங்கள் நினைவிருக்கட்டும் நீங்கள் எதற்காவது கேட்டுக் கொண்டால் தவிர வாட்ஸ்அப் உங்களுக்கு OTP எண் எதையும் அனுப்புவது இல்லை.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பாதுகாப்பு தகவலை உறுதிப்படுத்த உதவும் 2FA அல்லது டூபெக்டர் உறுதிப் படுத்தும் முறையை வாட்ஸ்அப் உங்களுக்கு வழங்குகிறது வாட்ஸ்-அப் செயலியில் Setting > Account > Two-step verification என்ற ஆப்சனை கிளிக் செய்து இந்த 2FA வழிமுறையை ஆக்டிவேட் செய்யவும்.

எப்படி தடுப்பது?

வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் டூ ஃபேக்டர்/2fa உறுதிபடுத்தும் வழியை பயன்படுத்தவும்

தெரியாத எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் லிங்குகளை திறக்க வேண்டாம்

தெரியாத அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் பைல்களை டவுன்லோட் செய்ய வேண்டாம்

உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாராவது மெசேஜ் அனுப்பி பணம் கேட்டால் அவர்களுக்கு போன் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |