Categories
டெக்னாலஜி

உங்கள் போனில் வாட்ஸ்அப் தானாக அழியும் – புதிய அதிரடி அறிவிப்பு…!!

வாட்ஸ்அப்பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் என்பது அண்மைக்காலமாக அனைவரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. வாட்ஸ் அப் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தகவல்கள் பரிமாறுதல், குரூப் சாட், வீடியோ கால் போன்ற சிறந்த அம்சங்கள் இருக்கின்றன. இதனால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

அதன்படி வாட்ஸ்அப்பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பண பரிவர்த்தனை டேட்டாக்கள், பயனர்களின் மொபைல், இருப்பிட விவரங்கள், ஆடியோ- வீடியோ பைல்களை இணைத்து அனுப்பும் மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் புதிய சேவைகளும் நடைமுறைக்கு வர உள்ளன என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |