வரும் 2020ஆம் ஆண்டுமுதல் பல பழைய ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விண்டோஸ் நிறுவனம் அதன் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கிவரும் சேவையை இன்றுடன் (டிசம்பர் 31) நிறுத்திக்கொள்கிறது.
இதனால், வாட்ஸ்அப் செயலியும் இன்றுமுதல் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது. அடுத்துவரும் சில மாதங்களில் பல பழைய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது. அதேபோல வரும் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் ஐஓஎஸ் 8, அதற்கு முந்தைய ஐஓஎஸ் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 2.3.7-க்கு முந்தைய மாடல்களிலும் வாட்ஸ்அப் செயல்படாது” என்று வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளங்களைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில், ஏற்கனவே பயனாளர்கள் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கமுடியாது. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற மெசேஞ்சிங் செயலியான வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 2014ஆம் ஆண்டு வாங்கியது.