2020 புத்தாண்டில் புதிய சாதனையை வாட்ஸ்அப் நிறுவனம் படைத்துள்ளது. ஒரே நாளில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
2019 ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் உடன் ஒப்பிடும்போது வாட்ஸ் அப் அழைப்பு 50%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கொரோனா நோய் உலக அளவில் பரவுவதால் குரல் மற்றும் வீடியோ பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று 20 பில்லியன் வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பப் பட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. 20 பில்லியன் செய்திகளில் 12 பில்லியன் இந்தியாவில் மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பில்லியனுக்கும் அதிக பயனாளர்களை கொண்ட பேஸ்புக் நிறுவனம் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு மேலதிகமாக நேரடி ஒளிபரப்பு 2020ஆம் ஆண்டு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 55 மில்லியனுக்கும் அதிகமான நேரடி ஒளிபரப்புகள் நடத்தப்பட்டன. அமெரிக்காவில் புத்தாண்டு எப்போதுமே அனைத்து தயாரிப்புகளும் சாதனை படைக்கும் எண்களை கொண்டு வருகிறது என்று ஃபேஸ்புக் நிறுவனம் பெருமிதம் கொண்டுள்ளது. செய்தி அனுப்புதல், புகைப்படங்கள் மற்றும் சமூக பகிர்வுக்கான, மார்ச் 2020 இல் தொடங்கி பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.