Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கோதுமை ரவா அல்வா….!!

குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கோதுமை ரவா அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான  பொருட்கள் :

கோதுமை  ரவா                                      :          ஒரு  கப்

சர்க்கரை                                                      :        ஒரு  கப்

சர்க்கரை  சேர்க்காத  பால்கோவா  :         ஒரு  கப்

நெய்                                                               :        அரை  கப்

ஏலக்காய்  பொடி                                     :          தேவையான  அளவு

முந்திரி                                                         :        தேவையான  அளவு

பாதாம் பருப்பு                                           :         தேவையான  அளவு

செய்முறை :-

குக்கரில்  நெய்யை  ஊற்றி , அதில்  கோதுமை  ரவையை  போட்டு  குறைந்த  சூட்டில்                       வறுக்கவும் .

சிறிது தண்ணீரை  தனி  பாத்திரத்தில்  கொதிக்க  வைத்து  எடுத்துக்கொள்ளவும் .

கோதுமை  ரவை  வாசனை  வர  ஆரம்பித்ததும் , தீயின்  அளவை  குறைத்து , சூடான  நீரை  எடுத்து  மாவில்  உற்றவும் .

தண்ணீர்  தெறிக்கும்  அதனால் மெதுவாக  ஊற்றவும்.

பிறகு  மூடி  வைத்து  , தீயின்  அளவை  குறைத்து  சுமார்  பத்து  நிமிடங்கள்  வேக விடவும் .

பின்னர்  சிறிதளவு  தண்ணீரை  ஒரு  வாணலியில்  ஊற்றி  சூடாக்கி  அதில்  சர்க்கரை , துருவிய  கோவா ஆகியவற்றைச்  சேர்த்து  கிளறவும்.

எல்லாம்  ஒன்றாக  சேர்ந்து கெட்டியாகி  திரண்டு  வரும்  வரை  கிளறிக்  கொண்டே  இருக்கவும் .

பிறகு  அதில் ஏலப்பொடி  சேர்த்து  கிளறி  விடவும் .

இறக்கிய  பின்  அத்துடன்  நறுக்கின  முந்திரி , பாதம்  கொண்டு  அலங்கரித்து  சூடாகப்  பரிமாறவும் .

 

Categories

Tech |