ஆஸ்திரேலியாவில் பெண் செய்தியாளர் ஒருவர் தனது தோளில் மலைப்பாம்பை வைத்து கொண்டு செய்தி அளித்து கொண்டிருந்தபோது சீரியதால் அவர் பயந்துவிட்டார்.
ஆஸ்திரேலியாவில் சாரா கேட் ( Sarah Cawte) என்ற பெண் ஒருவர் நைன் நெட்வொர்க் சேனலில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாம்புகளின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து சிறப்பு செய்தியை வழங்குவதற்காக வாகா வாகா (Wagga Wagga) என்ற பகுதியில் உள்ள ஒரு பாம்பு பண்ணைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் தனது பணியை தொடங்கிவிட்டார். அதாவது அங்கிருந்த மலைப்பாம்பு ஒன்றை பயமில்லாமல் தன்னுடைய தோளில் வைத்துக் கொண்டு சாரா செய்தி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கருப்பு நிறத்தில் உள்ள மைக்-ஐ பார்த்த பாம்பு அச்சமடைந்ததால், ஆக்ரோஷத்துடன் சீறியது.
இப்படி மீண்டும் மீண்டும் மைக்-ஐ கடிக்கும் நோக்கத்துடன் பாம்பு சீறிக்கொண்டிருந்ததால் சாரா அச்சமடைந்தார். உடனே அருகில் இருந்த பாம்புகளை கையாளும் நபர் ஒருவரும், ஒளிப்பதிவாளரும் சாராவுக்கு உதவினர். என்னதான் இருந்தாலும் பாம்பு என்றாலே பயம் இருக்கத்தானே செய்யும். அவர் தைரியமாக தோளில் வைத்ததே பெரிய விஷயம்.