Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

கல்லூரிகள் எப்போது ? அமைச்சர் விளக்கத்தால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை வந்த பிறகே கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும்  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

தமிழகத்தை விட்டு கொரோனா நீங்கிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு பயம் இல்லை என்ற நிலை வந்த பிறகு கல்லூரி திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்த அவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மை பணிகள் முடிந்த பிறகு வகுப்புகள் தொடங்கும். எந்த நேரத்திலும் செமஸ்டர் தேர்வு நடத்தவும் அரசு தயாராக உள்ளது என்று கூறிய அமைச்சர் பி .இ கலந்தாய்வுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்யவும் அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

Categories

Tech |