Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவில்களை எப்போது திறக்கலாம் ? தலைமை செயலாளர் ஆலோசனை …!!

தமிழகத்தில் வழிபட்டு தளங்கள் திறப்பது குறித்து சமய தலைவருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

வருகின்ற எட்டாம் தேதி முதல் கோவில்கள் வழிபாட்டுத் தளங்களை என மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதுதொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து சமய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை  நடத்த தலைமை செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. 8ஆம் தேதிக்கு பிறகு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்கும் போது ஏற்படக் கூடிய விஷயங்கள் என்னென்ன ? என்பது குறித்து நேரடியாக அவர்களுடைய ஆலோசனை பெற்று அதன் பிறகு ஒரு முடிவினை தமிழக அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தமிழகம் முழுவதும் கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டாலும் கூட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கோவில்கள் மீண்டும் திறக்கப் படுமா ? என்ற ஒரு கேள்வி இருக்கிறது. 4 மாவட்டங்களில் திறப்பதற்கான வாய்ப்பு என்பது மிகக் குறைவாகவே இருப்பதாக அதிகாரிகள் இருக்கிறார்கள்.

இந்த நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மற்றபடி மற்ற மாவட்டங்களில் கோயில்கள் மற்றும் வழிபாட்டு தளங்களை திறக்கும் போது அதிகளவில் மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் அதை எப்படி ஒருங்கிணைப்பது ? என்னென்ன நேரத்தில் வழிபாட்டு தலங்கள் மற்றும் கோவில்களில் மக்களை அனுமதிப்பது ? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சமய தலைவருடன் ஆலோசனை செய்து பிறகு ஒரு முடிவினை தமிழக அரசு அறிவிக்க வாய்ப்பிருக்கிறது.

Categories

Tech |