Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்குள் கொரோனா நுழைந்தது எப்போது..? எப்படி..? வெளியான பகீர் தகவல் …!!

நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களிலேயே கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஜனவரி 30ஆம் தேதியன்று கேரளாவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் 11ஆம் தேதியே சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு இருக்கின்றனர்.

 தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நாட்டின் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டதால் ஜனவரி 30 க்கு முன்னர் சீனாவிலிருந்து வந்த பயணிகளால் இந்த வைரஸ் இந்தியாவுக்குள் வந்ததா என்பது குறித்து அறுதியிட்டு கூற இயலவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |