Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் செல்லும்போது… தந்தை மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சிறுவனுக்கு தீவிர சிகிச்சை…!!

நாமக்கல் மாவட்டத்தில் மொபட் விபத்தடைந்து லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அடுத்துள்ள தேவனாம்பாளையத்தில் வசித்து வரும் கார்த்திகேயன்(35) அப்பகுதியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி மாதவி, இவர்களுக்கு அபிஷேக் என்ற 5 வயதில் மகனும் உள்ளது. இந்நிலையில் நேற்று கார்த்திகேயன் அவரது மகன் அபிஷேக்குடன் மொபட்டில் சோழசிராமணிக்கு சென்று கொண்டிருந்துளார். அப்போது பெருங்குடி அருகே சென்றுகொண்டிருக்கும் மொபட் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளனர்.

இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் கார்த்திகேயன் மற்றும் சிறுவனை உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லும் வழியிலேயே மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவருடைய மகன் அபிஷேக்கிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |