நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியில் சிக்கி விபதடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியில் ராமச்சந்திரன்(30) என்பவரும், தண்டராம்பேட்டையை சேர்ந்த பெரியசாமி(31) என்பவரும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு கட்டிட வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தள்ளனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது ராமச்சந்திரனின் இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் இவரது இரு சக்கர வாகனம் சிக்கி இருவரின் கால்களில் லாரியின் பின் சக்கரம் எறியுள்ளது. இந்த விபத்தில் இவருடைய கால்களும் சிதைந்து பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து குமாரபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.