ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கீழ்குடி கிராமத்தில் நூருதுஅம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் ராஜசேகரன்(33) என்பவருடன் டி.எம்.கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மூதாட்டியின் சேலை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து மூதாட்டி தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.