நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், யோகி பாபுவும் ஹீரோதான். அவர பத்தி சொல்லனும்னா, ஒரு காலத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். ஒரு படத்துலயாவது நம்ம தலையை காட்ட வேண்டும். ஆனா இப்ப தங்களுடைய படத்தில் யோகி பாபுவை நடக்க வச்சே தீரனும் என்ற சூழ்நிலை மாறி உள்ளது. இந்த வளர்ச்சி உண்மையிலேயே சந்தோஷம் யோகி. அடுத்ததாக குஷ்பூ. என்னமோ தெரியல அவங்க முகத்த பார்த்தாலே சின்ன தம்பி காலத்திற்கு போகிறேன்.
அடிச்சு புடிச்சு அந்த படத்தை போய் கமலா தியேட்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு பார்த்தது, நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட்டிட்டு போய் படத்தை பார்த்தது, என்னுடைய கேர்ள் பிரண்ட் கூட்டிட்டு போய் படம் பார்த்தது என கூறிக் கொண்டிருக்க ரசிகர்கள் யார் அந்த கேர்ள் பிரண்டு எனக் கேட்டனர். இதனை அவர் மழுப்பி விட்டு குஷ்புவிற்கு சிறிய கேரக்டர் தான். இருப்பினும் அவர் அதை பண்ணியது ரொம்ப சந்தோஷம்.
அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யா, சூர்யா நீங்க வந்துட்டீங்க, இன்னும் கொஞ்சம்தான். அப்படியே ஜம்ப் பண்ணி அந்த இடத்தை புடிச்சிடுங்க, தக்க வச்சுக்கோங்க. இன்னும் கொஞ்ச நாளில் 100% அதை முழுமையடைய போகின்றது. இவருக்கும் படத்தில் காட்சிகள் குறைவுதான். இருப்பினும் அவர் பண்ணியது ஒன்னு இருக்குள்ள, அவரிடம் எதுக்காக நீங்க ஒத்துக்கிட்டீங்க என கேட்டேன். அதற்காக உங்களுக்காக தான் என கூறினார். இந்த இடத்தில் உங்களுக்கும் எனது நன்றி என தெரிவித்தார்.