நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் உட்பட 2 பேர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தை அடுத்துள்ள மரப்பரை பகுதியில் கமலஜோதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ஊசி போடும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் தொட்டியபட்டியை சேர்ந்த ரேவதி(33) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ரேவதி வேலையை முடித்து விட்டு கமலஜோதியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது கமலஜோதியின் இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி எதிரே வந்த லாரியின் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த கமலஜோதியும் பின்னல் அமர்ந்திருந்த ரேவதியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எலச்சிபாளையம் போலீசார் இருவரின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.