Categories
கிரிக்கெட் விளையாட்டு

டான்ஸ் ஆடி… பாட்டு பாடி… பிராவோவின் ‘கொரோனா’ விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ!

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற பாடலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்வதற்காகவும், பிறருக்கு பரவகூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்களது மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன.

இந்தநிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிவரும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்’ (We Not Giving Up) என்ற 3 1/2 நிமிட பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.

அப்பாடலின் மூலமாக பிராவோ, பொதுமக்களிடம் கைகளைத் தொடர்ந்து கழுவுதல், வீட்டிலேயே தங்கி இருத்தல், கொரோனா தொற்று உள்ளவர்களிடமிருந்து விலகி இருத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்ற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இந்தபாடலை ஐ.பி.எல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் பிராவோ பாடிய இந்தப் பாடல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சமூக வலைதளவாசிகளிடமும் வைரலாகப் பரவத்தொடங்கியுள்ளது.

Categories

Tech |