Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் எப்போது A டீம் தான்…. ”வேல்”லை விட….. வேலை முக்கியம்… பாஜகவை சாடிய கமல் …!!

பாஜக கொடுக்கின்ற ‘வேல்’லை விட வேலை ரொம்ப முக்கியமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மைய்யத்தில் நல்லவர்கள் அணி சேரும்போது நாங்கள் முதல் அணியாக இருக்கும். கட்சிகளுடன் கூட்டணி என்பது அவசரமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியலை செய்கின்றோம்.மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப் பற்றிய விமர்சனம் தேவையற்றது.

அரசியலமைப்பு சட்டம் மீது யாராவது கை வைத்தால் போராட்டம் வெடிக்கும். உலகத்தில் தற்போது இல்லாத இதை பற்றி பேச வேண்டிய அவசியமே கிடையாது.சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். வேட்புமனுவில் கையெழுத்து போடும் போதே எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது தெரியும்.வேல் யாத்திரையை விட வேலை எப்படி வாங்கி தருவது என்பது தான் முக்கியம். இந்த வேலை யார் வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம். ஆனால் அந்த வேலை வாங்கித் தருவது என்பது பெரிய பொறுப்பு. தமிழகத்திற்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை அது.

வேல் யாத்திரை வேண்டாம் என்று ரத்து செய்தார்கள் என்றால் நல்லது. அது வந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று நினைத்து அவர்கள் செய்து இருக்கலாம். நான் எதிலேயும் B டீம் ஆக இருந்தது கிடையாது. எந்த படையிலும் B டீமாக இருந்தது கிடையாது. நான் எப்போதுமே A டீம் தான். எனக்கு கிடைத்த வாத்தியார்கள் சினிமா துறையிலும் சரி, எனக்கு கிடைத்த நண்பர்களிலும் சரி எப்போதும் A டீம் தான்.

ஆதாரத் தேவைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்கும் போது அது தான் முதல் முக்கியத்துவம். பல ஊர்களில் எட்டு நாளைக்கு ஒருமுறை குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது என்னும் நிலை எவ்வளவு கேவலமான நிலை. இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.பண்டிகைக்கு மக்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள். ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள். ஆனால் இந்த கடந்த ஆறு மாதங்களாக கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருந்த மக்களுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என கமல் தெரிவித்தார்.

Categories

Tech |