விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாமிநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள செந்தட்டி அய்யனார் கோவிலில் வைத்து நான்கு பேர் பணம் வைத்து சட்ட விரோதமாக சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி(36), செல்லபாண்டி(51), முருகன்(48), பூமிநாதன்(40) என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய 8,900 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.