இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வீடியோக்கள் சில சமயங்களில் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பல சமயங்களில் திகிலூட்டும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் ஐஎஃப்எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவுத்துள்ளார்.
அந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது சாலையில் ஒரு புலி நடந்து சென்று கொண்டிருக்கும் போது சில மான்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த புலி வேறொரு திசையில் சென்றது. இதை கவனித்த மான்களும் மற்றொரு திசையில் நடந்து சென்றது. ஒரு புலியானது மான்களை பார்த்து வேட்டையாடாமல் சென்றது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருவதோடு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்த வண்ணமாக இருக்கிறது.
Tigers are truly economical in killing their preys. They don’t kill just for the sake of killing. #TeraiTales #wildlife pic.twitter.com/BTDFNDJJLB
— Ramesh Pandey (@rameshpandeyifs) September 28, 2022