வடசென்னை-2 எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பிரபல நடிகர் தனுஷின் கூட்டணியில் தமிழ் சினிமாவில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடச்சென்னை மற்றும் அசுரன் என அனைத்து படங்களுமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதுகுறித்த தகவல்களை இன்னும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் வடசென்னை 2 உருவாகுமா? இல்லையா? என்ற கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன் இதுகுறித்து பேசியதாவது, வடசென்னை படம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பின்பு உருவாக உள்ளது.
மேலும் முதல் பாகத்தை விட வட சென்னை இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளது என்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் எடுக்கப்பட உள்ள வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். அதன்பின் தான் வடசென்னை படத்தை இயக்குவார் என்று தெரியவந்துள்ளது.