ஊரடங்கு முடிந்த பிறகு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவிவரும் நிலையில் மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு உத்தரவு அமல்படுத்தியது. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் எப்போது நடத்துவது தொடர்பான கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் கூறுகையில், கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப்ரல் 14க்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிவித்தார். மேலும் ஊரடங்கு முடிந்தத்த்தும் நிலுவையிலுள்ள தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஏப்ரல் 14க்கு பிறகும் தடை நீட்டிக்கப்பட்டால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.