தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு சாத்தியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவில் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் பேசி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்
பல்வேறு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகளுடைய கண்கள் பாதிக்கப்படுமா ? என்பது குறித்து எழும்பூர் கண்கள் மருத்துவமனையானது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதலமைச்சருடன் பேசி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.