‘பாரதி கண்ணம்மா’ க்ளைமாக்ஸ் எப்போது என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு இச்சீரியல் நடிகை பதிலளித்துள்ளார்.
வெள்ளித்திரையில் உருவாகிவரும் திரைப்படங்களுக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோல சின்னத்திரையில் உருவாகும் சீரியல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பதே சீரியல்கள்தான்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பா எனும் பரீனாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் பாரதிகண்ணம்மா சீரியல் க்ளைமாக்ஸ் எப்போது என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பரீனா 2051 இல் என்று பதிவு செய்துள்ளார். இத்தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்ததுடன் ஆலோசிக்கவும் செய்துள்ளது.