சிம்புவின் மாநாடு திரைப்படம் எப்போது வெளியிடப்படும் என்று கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் மாநாடு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு, படப்பிடிப்பு முடிவடைய இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளது. அரசியல் படம் என்பதால் கூட்டம் சேர்த்து எடுக்கப்படும் காட்சிகள் மட்டுமே இன்னும் மீதம் உள்ளது. படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.